தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 10, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 10, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காதலுக்காகவாவது...

* ஒரு தோழனாய்

உன்னைவிட்டு வந்தாலும்

இப்போதெல்லாம்

என் இருப்பிடம்

வந்து சேர இயலவில்லை என்னால்...

நிஜத்தை விட்டுவந்த

நிழல்போல!

* சிறு பறவை

பறந்து போனதற்காக

வருந்துவதா

அது பறக்கக்

கற்றுக் கொண்டதற்காக

மகிழ்வதா என்று

பரிதவிக்கிற

தாய்ப்பறவையாய்

பரிதவிக்கிறேன்...

உன்னுடனான நட்பு

காதலாக மாறிவிட்ட இன்று!

* நட்பை காரணம் சொல்லி

காதலை இழக்க துணிகிறாய்...

வாழ்வை இழந்து விடுவோமோ என்று

நான் பயப்படுகிறேன்!

* எல்லா நதிகளையும் உள்வாங்கி,

கடலென உருமாறி நிற்கும்

பெருவெளியைப் போல

உன் நேசத்தை மட்டுமல்ல

கோபங்களையும்

உள்வாங்கித்தான்

காதலாய் உருமாறி நிற்கிறேன்!

* நாம் இருவரும்

பேசிக் கொள்வதில்லை...

இதை விட வேறென்ன வேண்டும்

ஒருவரையொருவர்

புரிந்து கொண்டதற்கு!

* எனக்காக வேண்டாம்...

ஆசையில்லாமல் வாழ்வதற்கேனும்

ஆசை ஒன்று இருப்பது போல

காதலுக்காகவாவது

காதலித்துப் பாரேன்!

* தெரியுமா உனக்கு...

நட்புக்குள்

காதல் இல்லை என்றாலும்

காதலுக்குள்

நட்பு உண்டென்பது?

— என்.ரமேஷ், கொளத்தூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us