PUBLISHED ON : ஆக 19, 2012

அ நிறம் | அளவு
என்ன உரைத்தாள்?
* சாவை வென்றெடுத்த
சாவித்திரியாய் இரு!
* சகித்துப் போவதில்
கண்ணகியாய் இரு!
* கூடா ஒழுக்கமா
பரவாயில்லை...
கூடையில் சுமந்த
நளாயினியாய் இரு!
* சீற்றம் கொண்டபோதும்
சீதையாய் இரு!
* உன்னைக் கரம் பிடித்தபோது,
இத்தனையும் சொன்னாள்
என்னைப் பெற்றவள்!
* அலுவலக வேலை என
அர்த்த ராத்திரியில்
வரும் போதெல்லாம்
கண்ணகியாய் நானிருந்தேன்!
* போதையில் பொல்லாங்கு
செய்த போதும்,
பொறுமையில்
சீதையாய் நானிருந்தேன்!
* குடித்து குடித்து
குடல் நோவுடன்
குடை சாய்ந்த தேராய்
குலைந்து கிடக்கையில்
சாவித்திரியாய் நானிருந்தேன்!
* என்னை மணந்தவனே...
உன்னைப் பெற்றவள்
உனக்கென்ன உரைத்தாள்?
* இத்தனையும் செய்தால்தான்
ஆண்பிள்ளை நீ என
உரைத்தாளோ?
— ஜெ.பிரசின்னா, புது டில்லி.
