PUBLISHED ON : செப் 02, 2012

அ நிறம் | அளவு
நிலை!
* மாளிகையில் வாழ்ந்தாலும்
மண் குடிசையிலும்
வாழ்ந்து பாருங்கள்!
* அறுசுவை உணவு உண்டாலும்
கூழ் குடித்தும்
பழகிப் பாருங்கள்!
* பட்டாடை அணிந்தாலும்
எளிமையான ஆடைகளையும்
அணிந்து பாருங்கள்!
* குறையில்லா கண்கள் எனினும்
கண்மூடி கொஞ்சம்
நடந்து பாருங்கள்!
* கைகால்கள் பழுதில்லை என்றாலும்
ஒற்றைக் காலில் நடந்து
ஒற்றைக் கையில்
வேலை செய்து பாருங்கள்!
* நன்றாகக் கேட்கும் காதுகளை
கொஞ்சம் பஞ்சடைத்து
இருந்து பாருங்கள்!
* மென்று விழுங்கும் பற்கள் படாமல்
திரவ உணவுகளை
அருந்திப் பாருங்கள்!
* உற்றார் உறவினர் சுற்றம்
நட்பு இல்லாமலும்
விலகிப் பாருங்கள்!
* மாறுதலுக்குரிய மனித வாழ்வில்
நம் பயிற்சியே நிலையான
மகிழ்ச்சிக்குரியது என
வாழ்ந்து காட்டுங்கள்!
— சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.
