தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 04, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முள் வேலிகள்!

* தமிழா தமிழா... உறக்கம் போதுமே...

தருணம் இதுவே எழுவாய், நிமிருவாய்...

உமிழும் நிலையில் உன்னை வளைக்கிறாய்

ஒடுக்கும் கதிக்கு வலைகளை விரிக்கிறாய்

தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!

* தெற்கில் நீயோ ஓடிட இயலா

திரைகடல் மறிக்க, விழுந்து சாவாய்!

நிற்க இடமிலா நிலைமை வருமுன்

நீயுனை உணர்வாய் ஈழம் சான்று!

தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!

* நம்மொழி ஈன்ற குழந்தை மொழிகள்

நா‹க் காக சகோதரியாகி

மும்முனை நின்று நீர்களை முடக்கி

மூச்சை பறிக்கும் முயற்சிகள் தேவையா?

தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!

* அரசியல், பதவிகள், அகப்படும் சுருட்டல்கள்

அற்பமாய் தமிழர்கள் எலிப்பொறியில் வீழ்ந்தனர்

உரசிடில் இவர்களும் எட்டப்பர்களே!

உனைநீ யுணர்ந்து விரைந்து முடிவெடு!

தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!

* ஆதி இலங்கை அழிந்தது; காரணம்,

அந்நியன் புகுந்ததால் அநாதைத் தமிழர்கள்...

நீதி ஏதும் செய்திலை; எனவே,

நீ விழிப்பாயே... நிலைகொள் வாயே...

தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!

* நாட்டை சுடுகா(டு) ஆக்கிடும் முயற்சிகள்

நலியும் அரசியல் எலிகளால் ஆச்சு!

கோட்டை விட்டுக் கொடிகளை இழப்பின்

குங்குமத் தமிழே மயானமாய் எரியும்

தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!

* நதிகள் வயப்பட வழியேது யோசி?

நயமிலா அந்நியர் புகுவதை யோசி

விதிளை மாற்றிப் போரிட யோசி

வீணில் தூங்கினால் முள்ளின் வேலிகள்...

தமிழா, தமிழா விழிப்பாய் எழுவாய்!

— டாக்டர் கோவி.மணிசேகரன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us