தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 25, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உன் காதலும், அவன் நினைவுகளும்!



* அர்த்தங்களோடு

பொதிந்து

விலை மதிப்பற்ற பொருளாய்

உருவாகும் கண்ணீரை...

* காதலுக்காக உ<ருக்கி

தலைகுனிய வைக்காதே

இளைய சமுதாயத்தை!

* மையில்லாத பேனாவால்

காகிதத்தில் கிறுக்கியதெல்லாம்

வார்த்தைகளென நம்பி

எதிர்காலத்தையே

விரயமாக்கி

நிற்பவர்களையும்...

* கற்பனை கதைகளை

ரசித்து

கற்பைப் பறிக்கொடுத்தவர்களையும்...

எந்த சிறையில்

தள்ளுவது!

* உன்னிடம்

காதலைக் காண்பித்து

கற்பை

திருடிச் சென்றவனை

என் கவிதைகளில்

தேடுகிறேன்!

* விடிந்து விடாது

விடியலும் வந்துவிடாது

உன் தொடர் அழுகையால்!

* கத்தையாய் கலைந்திருக்கும்

உன் கூந்தலை

மொத்தமாய் அள்ளி

முடிந்து கட்டு!

* வழிந்தோடும்

உன் கண்ணீரை

கலைந்திருக்கும்

முந்தானையால் துடைத்தெடு!

* கோபத்தை

எரிப்பொருளாக்கு

விழிகளால் தீ மூட்டு!

* எரிந்து சாம்பலாகட்டும்

உன் காதலும்

அவன் நினைவுகளும்!

— அ.கென்னடி, லால்குடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us