தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : பிப் 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்படியேதானிருக்கிறது!

* அப்படியேதானிருக்கிறது...

எல்லாமும் இன்னமும்

அப்படியேதானிருக்கிறது!

* அமர்ந்து பேச நமக்கு

சிம்மாசனமிட்ட ஆலமரத்து வேர்!

* வியர்க்கிற போது

நாம் கேட்காமலேயே

வேகமாய் விசிறிவிட்ட மரக்கிளைகள்!

* நீருக்குள் தொங்கவிட்ட

உன் பாதத்தை

தொட்டுவிட்ட சேதியை

சொல்லி மகிழ்ந்தாட

”ழித்தோடும் வடவாற்று வெள்ளம்!

* கால்கொலுசை

கண்டுவிட்ட களிப்பில்

நீருக்குமேலாய் துள்ளிக் குதிக்கும் சிறுகெண்டை!

* அப்படி என்னதான் பேசிக் கொள்கின்றனர்?

என ஒற்றறிய

தினமும் வந்தமரும் ஜோடிக்கிளிகள்!

* முக வசீகரத்திலோ

உன் வார்த்தையின் அழகிலோ மயங்கி

பழந்தின்ன மறக்கும் மைனாக்கள்...

* எனக்கு தெரியாமல்

உன்னை ரசித்துவிட

இலைகளினூடே

திருட்டுத்தனமாய் எட்டிப்பார்க்கும்

மாலை நேர சூரியன்!

* எல்லாமும் இன்னும்

அப்படியேதானிருக்கிறது...

* காலச்சூழலின் கோரப்பிடியில்

நம் காதல் கைகூடாதென உணர்ந்த வேளையில்...

சடசடவென முறிந்து விழுந்து

சருகுகளோடு சருகுகளாய் சலனமற்று கிடக்கும்

நம் இதயங்களுந்தான்!

ஞானதாசன், கடலூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us