தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 10, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 10, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இது வைகையின் கோபம்!

* சிவனுக்காக தலைகுனிந்து

வைகையாய் மாறினேன்...

தவித்தோர் வாய்க்கு

தாகம் தீர்த்தேன் - எனை

தவிக்க விடுகிறீர்களே!

* வற்றாத செல்வமாய்

வாரி வாரி வழங்குகிறேன்

ஆனாலும் என் அருமை

தெ(பு)ரியவில்லையே!

* கண்டதைத் தின்று

காலைக் கடனை கழித்து

கடமையாய் என்னோடு

கலந்து விடுகிறீர்கள்

சட்டென்று பூசிக் கொள்ள

சந்தனமா, ஜவ்வாதா?

* அழுகியதை கொட்டும்போது

அருவருப்பில் மனம் கனக்கிறது!

* கரையெல்லாம் என்மீது

ஆக்கிரமிப்பு செய்கிறீர்கள்

ஆழமாய் என்னை வெட்டி

அங்கஹீனப்படுத்துவதோடு

ஆங்காங்கே சிறுவர்களின்

அகால இறப்புக்கும் ஆளாக்குகிறீர்கள்!

* பொறுத்து பார்த்து விட்டேன்

கழிவுகளின் முடைநாற்றமும்

கயவர்களின் ஆக்கிரமிப்பும்

கட்டுக்கடங்கா கோபம் தருகிறது!

* ஓலமிட்டு ஓலமிட்டு

ஓய்ந்து விடுவேன் ஒருநாள்...

கவலை எனக்கில்லை

கண்டிப்பாக உங்களுக்குத் தான்!

* ஒரு சொட்டு தண்ணீருக்காக

உங்கள் சந்ததி ஏங்கும்...

வருந்தி அழைத்தாலும்

வர மாட்டேன்!

இன்னொரு வைகை

இனிமேல் இல்லை!

எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us