sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 21, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 21, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிரிக்க விடுங்கள்!

* அவளை கொஞ்சம்

சிரிக்க விடுங்கள்

வாய் வலிக்கும் மட்டும்

சிரிக்கட்டும்!

* அடக்கமற்ற சிரிப்பென

அணை போட்டு விடாதீர்கள்...

ஆயுட்காலம் எத்தனையோ

அவளின் சிரிப்பிற்கு!

* காதல் முகமூடி அணிந்த

கள்ளப் பருந்துகளால்

அவள் வாழ்வு

கருகிப் போய் விடலாம்!

* உறவென்ற பெயருக்குள்

ஒளிந்திருக்கும்

சில ஓநாய் கூட்டத்தால்

உயிரை இழந்து விடலாம்!

* அறிவை வளர்க்கச் சென்று

சில அற்பர்களின்

ஆசைத் தீயில்

சிதைந்து விடலாம்!

* வாழ்க்கை காட்டில்

வழிதவறிய மானாய்

வஞ்சகர் வீசும்

வலைக்குள் வீழ்ந்து

வாழ்வை

தொலைத்து விடலாம்!

* பாவிகள் உலகில்

பிறந்து விட்டாள்

பாவை அவளை

சிரிக்க விடுங்கள்!

ப.லட்சுமி, கோட்டூர்.






      Dinamalar
      Follow us