தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஆக 18, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 18, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காத்திருக்கிறது காலம்!

* தோள்கள் வலிக்க

பூ மாலைகளை

தூக்கிச் சுமக்கின்றனர்!

* முகமெல்லாம் பூரிக்க

ரத்தினக் கம்பளம் விரித்து

முதன்மை படுத்தப்படுகின்றனர்!

* பொன், பொருள், புகழ்

அவர்களை மட்டும் தேடி...

* நம்மைப் போன்றோர்

தானே அவர்களும்...

உலகம் ஏன்

அவர்களை மட்டும்

அடையாளம் கண்டுகொண்டு

ஆராதிக்கிறது இப்படி?

* நமக்கு மட்டும் ஏன் இல்லை?

புரியாமையால் பலர்,

பொறாமையில் சிலர்!

* ஆராதிக்கப்படுபவர்கள்

அவதாரங்கள் அல்ல!

அவர்கள்...

உருவாக்கப்பட்டவர்களல்ல...

உரமேற்றப்பட்டவர்கள்!

* அவர்கள்...

அவதரித்த நாள் தொடங்கி

தமக்குள் தங்களைத் தேடி

பூமிக்குள் புதையல் போல்

புதைந்து கிடந்தவர்கள்!

* வெளிப்பட்ட நொடி தொடங்கி

தங்களுக்குத் தாங்களே

பட்டை தீட்டிக் கொண்டு

பரிமளித்தனர் வைரமாய்!

* தோள்களில் தவழும் அவர்களின்

மாலைகளை விலக்கினால்

மறைந்து கிடக்கும்

வடுக்களைப் பார்க்கலாம்!

அவை

அனுபவங்களின் அடையாளங்கள்!

* அனுதினம்

புகழைச் சுமப்பவர்கள்

ஆதியில்

போராட்டங்களைச் சுமந்தவர்கள்!

கவுரவங்களுக்காக

தங்களைக் காவு தந்தவர்கள்!

* எல்லை மீறிய பொறுமை

எல்லாவற்றிலும் உண்மை

இருந்தால்...

எவர்க்கும் மகுடம் சூட்ட

காத்திருக்கிறது காலம்!

— நாராயணன், பொள்ளாச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us