தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபஒளி ஏற்றிடுவோம்!

* கங்கா ஸ்நானம் செய்து

புத்தாடை உடுத்தி

பலகாரங்களை உண்டு

பட்டாசு வெடித்தலே

தீபாவளி நன்னாள் எனும்

நினைப்பை கொளுத்துவோம்!

* ஒலியால் செவிக்கும்

ஒளியால் விழிக்கும்

பாதிப்புண்டாக்கும்

பட்டாசுகளை வெடிப்பதால்

கரியாவது காசு மட்டுமல்ல...

வளி மண்டலமும் தான்!

* ஓசோன் ஓட்டையாலும்,

'குளோபல் வார்மிங்'காலும்,

கொதிக்கும் வெப்பத்தில்

கந்தகப்புகை கலந்து

நச்சாக்கிடும் வேலையை

அறவே நசுக்கிடுவோம்!

* புத்தாடையின் திருப்தி

நாம் அணிவதில் மட்டுமல்ல...

வறியவர்களுக்கு வழங்குவதிலுமுள்ளது

அவர்களின் வாழ்த்துகளையே

புத்தாடையாய் அணியப் பழகுவோம்!

வசதியற்றவர்களோடு பலகாரங்களை

பகிர்ந்து கொள்வோம்...

வயிறு நிறைந்து

வாயார வாழ்த்துவதையே

இனிப்பாய் உண்போம்!

* தீபாவளி பெயரால்

ஆடம்பரமாய் செலவிடும்

பட்டாசுக்கான பணத்தை

ஆதரவற்றவர்களுக்கு

உடையாய், உணவாய் வழங்கிடுவோம்!

அவர்களின் நன்றி வாழ்த்தொலியையே

பட்டாசொலியாய்

பாவித்து மகிழ்வோம்!

* அரக்கன் அழிவை

ஆர்ப்பாட்டமாய் கொண்டாடுதலுக்கு

பதிலாக, ஏழைகளுக்குதவிடுவோம்

அவர்கள் வாழ்வில்,

'தீப ஒளி' ஏற்றிடுவோம்!

— எஸ்.சங்கர், திருப்பரங்குன்றம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us