
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்திரம் வரைவது எப்போது?
மனிதா...
வாசிப்பதையே
வாழ்வில்
நேசிப்பதாக கொண்டால், - நீ
காலங்கடந்தும் - பிறரால்
சுவாசிக்கப்படுவாய்!
மனிதா...
உழைப்பதையே
வாழ்வில்
பிழைப்பாக கொண்டால், - நீ
பூமிப்பந்தில் பிறரால்
பூஜிக்கப்படுவாய்!
மனிதா...
அன்பையே
வாழ்வில்
பண்பாகக் கொண்டால், - நீ
அவனியில் - பிறரால்
ஆராதிக்கப்படுவாய்!
மனிதா...
உண்மையையே
வாழ்வில்
தன்மையாக கொண்டால், - நீ
உலகத்தில் - பிறரால்
உற்று நோக்கப்படுவாய்!
மனிதர்களே...
உளி கொண்டு செதுக்க
நீங்கள் ஒன்றும்
ஒன்றுக்கும் உதவா
பாறாங்கற்கள் இல்லை...
உயிருள்ள சிற்பங்கள்!
மனிதர்களே...
சுவர் இருக்கிறது;
சித்திரம்
வரைவது எப்போது?
- சு.பாரதி வீரமுத்து, சிவகங்கை.

