
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2014 வாழ்த்தி வரவேற்போம்!
இறந்து போன காலங்கள்
நமக்கு இழப்புகளை
இறைத்திருக்கலாம்!
முடிந்து போன நாட்கள்
நம் முயற்சிகளை
முறியடித்திருக்கலாம்!
சென்று விட்ட பொழுதுகள்
நம் சிந்தனையை
சிதறடித்திருக்கலாம்!
தவறி விட்ட தருணங்கள்
நம் தலைவிதியை
தடம்புரள செய்திருக்கலாம்!
மறைந்து போன மணித்துளிகள்
நம் மனித நேயத்தை
மறக்கடித்திருக்கலாம்!
கடந்து போன நிமிடங்கள்
நமக்கு கஷ்டங்களை
கொடுத்திருக்கலாம்!
வந்து போன விநாடிகள்
நம் வாழ்க்கையை
வழிமாற்றியிருக்கலாம்!
என்றாலும்...
புதியதாய் பிறக்கிற
புத்தாண்டில்...
வரவிருக்கும், ஒவ்வொரு
நொடியையும்,
வாழ்த்தி வரவேற்று
வசந்தத்தை
நம் வசமாக்குவோம்!
மனிதநேயம் காத்து
மனிதரில்
புனிதர் ஆவோம்!
— ஆர்.மீனா,
மதுரை.

