தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜன 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கை அர்த்தப்படும்!

தனிமரம்

தோப்பாவதில்லை...

ஒரு கை தட்டி

ஓசை எழுவதில்லை!

சொர்க்கம் விண்ணிலில்லை - அது

உறவுகளோடு மனிதன் மண்ணில்

கூடி வாழ்கிற வாழ்வே!

நரகம் வேறில்லை - அது

உறவுகளைத் தொலைத்த

மனித வாழ்வே!

உலகையே மனிதன்

உரிதாக்கிக் கொண்டாலும்

உறவுகள் இல்லையேல்

பயனேதும் இல்லை!

உறவு மலர்கள்

பூத்தாடும் வாழ்க்கை

மணம் வீசும் இன்ப மலர்ச்சோலை!

உறவற்ற வாழ்க்கை

தனிமை, வெறுமை எனும்

துன்ப முள்ளாடும் கொடும்பாலை!

உறவுகளை ஒதுக்கி

வாழ்வதென்ன வாழ்வா...

அவ்விதம் வாழ்வதும் ஒரு

வாழ்வா...

உலகம் என்பது

உறவுகளுக்குள் அடக்கம்!

உறவுகளால் தான்

உலகமது நிலைக்கும்!

உண்மை அன்பிலே

உறவுகள் மெய்ப்படும்

உறவுகளால்தான் மனித

வாழ்க்கை அர்த்தப்படும்!

உறவுகளை நேசிப்போம்

உறவுகளால் நாம்

வாழ்வுதனை வாசிப்போம்!

உறவு மெய்ப்படட்டும்

உலகு மேம்படட்டும்!

— நெப்போலியன்,

மண்ணூர் பேட்டை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us