
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேடுவதை நிறுத்துங்கள்....
முயற்சியை
முடக்கிவிட்டு
வெற்றியை
தேடுவதை நிறுத்துங்கள்!
நம்பிக்கையை
நழுவ விட்டு
அதிர்ஷ்டத்தை
தேடுவதை நிறுத்துங்கள்!
மதியை
மறைத்து வைத்து
விதியை
விமர்சிப்பதை நிறுத்துங்கள்!
நிம்மதியை
ஒளித்து விட்டு
சந்தோஷத்தை
தேடுவதை நிறுத்துங்கள்!
வாய்ப்புகளை
தவற விட்டு
திறமையை
தேடுவதை நிறுத்துங்கள்!
பிறப்பை நரகமாக்கி
இறப்பில்
சொர்க்கம்
தேடுவதை நிறுத்துங்கள்!
மனிதத்தை
மறந்து விட்டு
மதத்தில் கடவுளை
தேடுவதை நிறுத்துங்கள்!
— இளமதி அறிவுடைநம்பி,
எஸ்.எஸ்.கோட்டை.

