PUBLISHED ON : மே 25, 2014

அ நிறம் | அளவு
உயிரில் கலந்த உறவு!
அணைத்துவிட
காதல்
நெருப்பல்ல - அது
எரிமலை!
கலைத்துவிட
காதல்
மணல் வீடல்ல - அது
மனக்கோட்டை!
வற்றிப் போக
காதல்
ஓடையல்ல - அது
சமுத்திரம்!
மூடிவிட
காதல்
குழியல்ல - அது
பள்ளத்தாக்கு!
அளந்துவிட
காதல்
நிலமல்ல - அது
ஆகாயம்!
புரட்டி விட
காதல்
குன்றல்ல - அது
மலை!
அழித்துவிட
காதல்
உடம்பல்ல -அது
ஆன்மா!
பிரிந்துவிட
காதல்
ரயில் சினேகிதமல்ல - அது
உயிரில் கலந்த உறவு!
— தி.திருமலைச்சாமி, சென்னை.
