PUBLISHED ON : ஜூன் 08, 2014

அ நிறம் | அளவு
வரும்வரை!
என்
கவிதைகளின்
கருப்பொருள் ஆனவனே...
என்
வாழ்வின் ஜீவன்
நீ தானே!
உச்சி முகர்ந்து,
உள்ளம் மகிழ்ந்து,
உன்னுள் நான் கலந்து...
என்னுள் நீ கரைந்து...
இனிதே கூடி,
இன்பமாய் வாழ
ஏங்குகிறேன்
நீ
தவிர்க்கிறாய்...
நான் தவிக்கிறேன்!
காலன் வரும் வரை காத்திருப்பேன்
அதுவரை...
கவிதையில்
உன்னுடன்
வாழ்ந்திருப்பேன்!
— ஆர்.பானு, மதுரை.
