தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை !

கவிதைச்சோலை !

கவிதைச்சோலை !


PUBLISHED ON : அக் 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சினிமா...

* இது

விஞ்ஞானம்

அனுப்பி வைத்த

வித்தியாசமான

வெளிச்ச கருவி!

* நாம் தான் அதை

இன்னும்

இருட்டிலேயே

காட்டிக்

கொண்டிருக்கிறோம்!

* வயல்களில்

சிந்துவதை விட

திரையங்குகளின்

வாயிலில்

சிந்தும்

வியர்வை தான்

இங்கு அதிகம்!

* உழைத்து முடித்து

வீடு திரும்பும்

நாங்கள்...

ஓய்வு என்று சொல்லி...

சினிமா கொட்டகையில்

போய்

விற்று விட்டு

வருகிறோம்

எங்களின் உழைப்பை!

* ஆபரேட்டரின் அறையில்

கார்பனும்

தியேட்டருக்குள்

எங்களின் நேரமும்

கருகுகிறது!

* பொழுதுகளை

காசு கொடுத்து

விற்கிறோம்!

* கனவுகளை

காசு கொடுத்து

வாங்குகிறோம்!

* நிஜத்தில்

உழைக்காமல்

நிழலில்

ஜெயிப்பதை

நம்புகிறோம்!

* அமுத சுரபியை

அடகு வைத்து விட்டு

அன்னமிட்டகை

பார்க்கிறோம்!

*வன்முறை

யாகம் வளர

சினிமாவிலிருந்து

நெய்

ஊற்றுகிறோம்!

*ஜாதிக்

கரையானுக்கு

சினிமாவில்

புற்றுக் கட்டி

கொடுக்கிறோம்!

*சுவரின்

நிர்வாணம்

மறைக்க

அதன் மேல்

நிர்வாண

படங்களையே

ஒட்டுகிறோம்!

*அம்மா

என்பதற்கு

பதிலாக...

எங்கள்

குழந்தைகளுக்கு, 'அன்பே...' என்று தான்

சினிமா

சொல்லிக் கொடுக்கிறது!

*நிழல்

காதலுக்கு

பூமாலை

சூட்டி விட்டு,

நிஜ காதலுக்கு

தூக்குக் கயிறு

தயாரிக்கிறோம்!

*இந்த

சினிமா என்னும்

அற்புதமான கல்லை

சிற்பமாய்

செதுக்குவதற்கான

உளியை

ரோகிகளின்

கையில்

கொடுத்தது யார்?

*ஒன்று

சிற்பியை

மாற்றுவோம்...

இல்லையேல்

உளியை

உடனடியாய்

கைப்பற்றுவோம்!

— பவானிதாசன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us