தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : செப் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை இல்லையேல்!

* புரிதல் இல்லையேல்

புரட்சிகள் கூட

பொய்த்து விடும்!

* இலக்கியங்கள் இல்லையேல்

இலக்கணம் கூட

புறக்கணிக்கப்பட்டு விடும்!

* அரவணைப்பு இல்லையேல்

தாயன்பு கூட

அருகதையற்றதாகி விடும்!

* ஊடல்கள் இல்லையேல்

காதல் கூட

கசந்து விடும்!

* இயற்கை இல்லையேல்

இமயம் கூட

சரிந்து விடும்!

* மனிதம் இல்லையேல்

மாந்தர் கூட

மாக்களாகி விடுவர்!

* உழைப்பு இல்லையேல்

உளிகள் கூட

உருவிழந்து விடும்!

* முகங்களை தொலைத்தபின்

முகவரிகளைத் தேடி

நாம் சாதிக்கப் போவதென்ன?

* எதை நோக்கி ஓடினும்,

முதலில், இயற்கையை காத்திடு

இறுதிவரை, மனிதத்தை போற்றிடு!

— ஆர்.மீனா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us