PUBLISHED ON : நவ 02, 2014

அ நிறம் | அளவு
பேச்சு பேச்சா இருக்கணும்!
கோபமாய் பேசினால்
குணத்தை இழப்பாய்!
அதிகமாய் பேசினால்
அமைதியை இழப்பாய்!
வேகமாய் பேசினால்
அர்த்தத்தை இழப்பாய்!
வெட்டியாய் பேசினால்
வேலையை இழப்பாய்!
ஆணவமாய் பேசினால்
அன்பை இழப்பாய்!
பொய்யாய் பேசினால்
பெயரை இழப்பாய்!
சிந்தித்து பேசினால்
சிறப்பாய் இருப்பாய்!
சிரித்து பேசினால்
அன்பாக இருப்பாய்!
பேசுங்கள்:
தாயிடம் அன்பாக
தந்தையிடம் பண்பாக
தங்கையிடம் பாசமாக
ஆசிரியரிடம் உரிமையாக
கடவுளிடம் மவுனமாக!
— ஆர்.மீனாட்சி, திண்டுக்கல்
