sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கவிதைச்சோலை!

/

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 23, 2014

Google News

PUBLISHED ON : நவ 23, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இப்போது........

முல்லைக் கொடிகளை

முறித்துப் போட்டுப்போகும்

பாரிகளின் கார்கள்!

மாபெரும் விருந்துகளில்

மயில் கறி கேட்கும்

பேகன்கள்!

அவ்வையைக் கண்டதும்

அதிசய நெல்லிக்கனியை

ஒளித்து வைக்கும்

அதியமான்கள்!

ஆட்சியை பிடிக்க

தம்பியின் தலை கேட்கும்

குமணர்கள்!

மணியடித்த பசுவிடம்

பேரம் பேசும்

மனுநீதிச் சோழர்கள்!

காரியம் நடக்க

காசு கேட்கும்

காரிகளும், ஓரிகளும்!

சமாதான புறாக்களின்

சதைகளை ருசி பார்க்கும்

சிபி ராஜாக்கள்!

கவச குண்டலங்களை

டாஸ்மாக் கடைகளில் அடகு வைக்கும்

கர்ண வீரர்கள்!

இப்போது...

கண்ணன் காண்டீபம் ஏந்தி நிற்க...

அர்ஜுனன் கீதை சொல்கிறான்!

இளசை சுந்தரம்,

மதுரை.






      Dinamalar
      Follow us