PUBLISHED ON : ஏப் 26, 2015

அ நிறம் | அளவு
பஞ்சம்!
பசி, பட்டினி
வேலையின்மை
வறுமை, தற்கொலையாம்!
தினம் நானூறு ரூபாய்
என்றாலும்
சித்தாள் வேலைக்கு
ஆட்கள் கிடைக்கவில்லை!
மூன்று வேளை உணவளித்து
இருக்க இடம் கொடுக்கும்
ஓட்டல் வேலைக்கு
ஆட்கள் இல்லை!
வயிற்றிற்கு உணவளிக்கும்
விவசாய வேலைக்கு
ஆட்கள் பற்றாக்குறை!
சரக்குகள் ஏற்றி இறக்கும்
கூலித் தொழிலுக்கும்
விற்பனையாளர்களுக்கும்
ஆட்கள் கிடைக்கவில்லை!
படிப்பும், பயிற்சியும் வேண்டாம்
ஆட்கள் தேவை என்ற போர்டு
பல இடங்களில்
தொங்கிக் கொண்டிக்கிறது!
தொழிற்பேட்டைகளிலும்
ஏற்றுமதி வளாகங்களிலும்
செய்தித்தாள்களிலும்
இணையங்களிலும்
ஏராளமான வேலைவாய்ப்புகள்
கொட்டிக் கிடக்கின்றன!
பஞ்சம் இருப்பது உண்மைதான்...
நேர்மை, திறமை
உண்மையாக
உழைக்கும் ஆட்களுக்கு!
— ஏ.வி.கிரி, சென்னை.
