/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
தாய்ப்பால் ஐஸ்கிரீமுக்கு லேடி காகா பெயர்!
/
தாய்ப்பால் ஐஸ்கிரீமுக்கு லேடி காகா பெயர்!
PUBLISHED ON : செப் 06, 2015

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி, லேடி காகா, 29; இவரின் சிகை அலங்காரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சேட்டைக்கார பெண்ணாக இருந்தாலும், மிகவும் மென்மையான சுபாவம் உள்ள இவரை, சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம், கோபப்படுத்தி விட்டது.
அந்நிறுவனம், தாய்ப்பால் மூலம் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. விருப்பப்படும் பெண்களிடம் இருந்து, தாய்ப்பாலை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி, குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்து, இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. அந்த ஐஸ்கிரீமுக்கு, 'ராயல் பேபி காகா' என, பெயர் வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள லேடி காகா, தன் அனுமதியின்றி பெயர் வைத்த, அந்த ஐஸ்கிரீம் நிறுவனத்திடம், பல கோடி ரூபாய் கேட்டு, மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
— ஜோல்னாபையன்.

