PUBLISHED ON : ஜன 31, 2016

அ நிறம் | அளவு
ஆசுவாசப்படுத்து!
நினைவு தெரிந்த
நாள் முதல்
எனக்கும், உனக்குமான
போராட்டம்
ஏதாவது ஒரு வழியில்
தொடர்ந்து கொண்டே
வருகிறது!
இரவிலும், பகலிலும்
பூதாகரமான நிழலாக
என்னை நீ விடுவதேயில்லை!
ஆனாலும் எனக்கு
எப்போதும்
எட்டாத உயரத்திலேயே நீ!
இரவில் உன்னைக்
காணும் போது
இன்பமாகவும்...
பகலில்
கடுமையாகவும் தெரிகிறாய்!
இருந்தும் எப்படி எல்லாமோ
முயற்சித்து
உன்னை தொடுகிறேன்
நீயோ...
சில நிமிட சந்தோஷத்தை
இறைத்து விட்டு
இன்னும் விரிந்து
கொண்டே போகிறாய்!
என் ஆசைக் கனவே...
நீ ஏன் என்னுள்
கற்பனை வலைகளை
விரித்துக் கொண்டே இருக்கிறாய்...
போதும் என்ற
நிறைவைக் கொடுத்து
சிறிது நேரம்
என்னை ஆசுவாசப்படுத்து!
— ப.லட்சுமி, கோட்டூர்.
