PUBLISHED ON : ஜூலை 17, 2016

அ நிறம் | அளவு
ஆரம்பம்!
* ஆசிரியர் அடித்தால்
மனம் உடைந்து
விஷம் குடிக்கிறான்
ஒரு மாணவன்...
* கல்லூரி போகுமுன்னே
காதல் வலையில் வீழ்ந்து
தூக்குக் கயிற்றை
தேடுகிறாள் ஒரு மாணவி!
* கள்ளக்காதல் வெளியில்
தெரிந்தவுடன் மானம் காக்க
கடலில் குதிக்கிறது
ஒரு ஜோடி!
* மேலதிகாரி கொடுமையை
எதிர்க்கத் துணிவின்றி
ரயில் முன் பாய்ந்து
உயிரை விடுகிறார்
ஒரு நேர்மையான அதிகாரி!
* கட்சித் தலைவர்களுக்கு
தண்டனை என்றால் தலையில்
பெட்ரோல் ஊற்றிக் கொள்கிறார்
ஒரு தொண்டர்!
* வயிற்று வலி
கடன் தொல்லை தாங்காமல்
உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் பலர்!
* அவர்களுக்குத் தெரியாது
மரணம் என்பது முடிவல்ல...
அவர்கள்
செயலை தூற்றி பிறக்கப்போகும்
அவப்பெயரின் ஆரம்பம் என்று!
— 'சொல்கேளான்' ஏ.வி.கிரி, சென்னை.
