PUBLISHED ON : டிச 11, 2016

அ நிறம் | அளவு
வாழ்க்கை ஒன்றுதான்!
உலை அரிசிக்கு தெரிவதில்லை - அது
உருமாறி பலரின் பசியாற்றப் போவது!
ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை - அது
அரைபட்டு பின் அடுப்புக்கு போவது!
அட்சதை அரிசிக்கு தெரிவதில்லை - அது
மங்கலப் பொருளாகி ஆசிர்வதிக்கப் போவது!
வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை - அது
சந்ததிகள் கையால் சவத்தின் வாய்க்கு போவது!
ரேஷன் அரிசிக்கு தெரிவதில்லை - அது
ஏழை வீட்டில் மட்டுமே உணவாகப் போவது!
அரிசி ஒன்று தான் - ஆனால்,
பயன் வேறு வேறு!
வாழ்க்கை ஒன்று தான் - அது
வாழ்பவனையும், வாழும் விதத்தையும் பொறுத்தது!
— எஸ்.ஆர்.சாந்தி, மதுரை.
