PUBLISHED ON : பிப் 05, 2017

அ நிறம் | அளவு
சிலருக்கு மட்டும் தான்
சிலருக்கு மட்டும் தான்
தெரிகிறது...
வாழும் முறையும்
வளரும் வித்தையும்!
சிலருக்கு மட்டும் தான்
தெரிகிறது...
வீழ்ச்சியிலிருந்து
வெற்றிக்கு வர!
சிலருக்கு மட்டும் தான்
தெரிகிறது...
இருட்டிலிருந்து
வெளிச்சத்திற்கு வர!
சிலருக்கு மட்டும் தான்
தெரிகிறது...
பாசத்தையும்,நேசத்தையும்
நெஞ்சில் வைக்க!
சிலருக்கு மட்டும் தான்
தெரிகிறது...
ஒடிந்த மனதிற்கு
ஒத்தடம் கொடுக்க!
சிலருக்கு மட்டும் தான்
தெரிகிறது...
துக்கத்தையும், துயரத்தையும்
குழித்தோண்டி புதைக்க!
சிலருக்கு மட்டும் தான்
தெரிகிறது...
முகாரி ராகத்தை
தோடி ராகமாக மாற்ற!
முயற்சியென்பது ஊன்றுகோல்
பயிற்சியென்பது திறவுகோல்
இதுதான்
இவர்கள்
வாழ்க்கையின் சூத்திரம்!
— அ. முருகானந்தம், மதுரை
