தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : டிச 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வு மலரும்!

உதிக்கும் கதிரவன் அழகையும்

மறையும் சூரியன் எழிலையும்

ரசித்துப் பழகணும்!

பெய்யும் மழையையும்

சன்ன இழையாய் விழும்

மழை நீரையும்

கண்டு களிக்கணும்!

மலர்களின் நறுமணத்தை

நுகர்ந்து மகிழணும்

கனிகளின் சுவையை

சுவைத்து நெகிழணும்!

வண்ணப் பூச்சிகளின்

வசீகர நிறங்களை

சிலாகித்து சொல்லணும்!

குளிர்ந்த தென்றலையும்

மார்கழி பனி காற்றையும்

இதமாய் அனுபவிக்கணும்!

இயற்கை சூழலை

இன்பமாய் ஆனந்திக்கணும்

பறவைகளின் குரலை

செவிமடுத்து மகிழணும்!

மின்னும் தாரகைகளையும்

விண்ணில் தவழும் நிலவையும்

திரண்டு ஓடும் மேகங்களையும்

பார்த்து ரசிக்கணும்!

ஆர்ப்பரிக்கும் கடலலைகளையும்

பொங்கும் ஆற்று நீரையும்

கொட்டும் அருவிகளையும்

நின்று கவனிக்கணும்!

இயற்கை நமக்காக

கொடையாய் அளிக்கும்

ஆனந்த உன்னதங்களையும்

சுவீகரித்து பழகணும்!

அதனால், நம்முள்ளே

அமைதி கிடைக்கும்

உள்ளம் தெளிவுறும்

சந்தோஷம் பொங்கும்

வாழ்வு மலரும்!

சாய், மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us