தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : பிப் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எது முக்கியம்

நாள்காட்டியில் தேதியை

கிழிப்பது முக்கியமில்லை...

அந்த தேதியில்

நாம் என்ன கிழித்தோம்

என்பதே முக்கியம்!

மற்றவர்களுக்கு பிடித்தது போல

பளபளப்பாய் வாழ்வது

முக்கியமில்லை...

என்றும் நமக்கு பிடித்தது போல

கலகலப்பாய் வாழ்வது தான்

முக்கியம்!

ஏமாறாமல் வாழ்வது

முக்கியமில்லை...

பிறரை

ஏமாற்றாமல் வாழ்வது தான்

முக்கியம்!

வரவுக்கு ஏற்ப பணத்தை

செலவழிப்பது முக்கியமில்லை...

அந்த பணத்தை

நாம் எப்படி சம்பாதித்தோம்

என்பதே முக்கியம்!

அனாதை இல்லத்திற்கு

அள்ளித் தருவது முக்கியமில்லை...

அந்த இல்லத்திற்கு

நம் பெற்றோரை

அனுப்பாமல் இருப்பதே முக்கியம்!

தத்துவங்களை மேடையில்

பேசுவது முக்கியமில்லை...

அதன்படி

நாம் நடக்கிறோமா

என்பதே முக்கியம்!

மற்ற செல்வங்களோடு

வாழ்வது முக்கியமில்லை...

பெற்ற பிள்ளைகளோடு

வாழ்கிறோமா என்பதே

முக்கியம்!

துரோகம் செய்த நண்பனை

துரத்துவது முக்கியமில்லை...

தவறு செய்த நண்பனை

திருத்துவதே முக்கியம்!

விழாமல் வாழ்வை கடப்பது

முக்கியமில்லை...

அப்படி விழுந்தாலும்

உடனே எழுந்து

நடப்பது தான் முக்கியம்!

நம்மை சிரிக்க வைப்பவர்களை

சிரிக்க வைப்பது முக்கியமில்லை...

நம்மை கண்டு

ஏளனமாய் சிரிப்பவர்களை

சிந்திக்க வைப்பதே முக்கியம்!

மு.பெ.ராமலிங்கம், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us