PUBLISHED ON : பிப் 24, 2019

அ நிறம் | அளவு
ஒரு உலகமாய் ஒன்றாவோம்!
அம்பு எய்யும் முன்
இலக்கை தீர்மானியுங்கள்
எதிர்க்கும் முன்
நோக்கத்தை சிந்தியுங்கள்!
துாண்டி விட்டால்
உடனே எரிந்து விடாதீர்
துாண்டுகோல் மீதே
சந்தேகப்படுங்கள்!
எவர் சொன்னாலும்
முழுமையாக நம்பாதீர்
எந்த நாணயத்திற்கும்
மறுபக்கம் உண்டு!
வியாபாரியின் லாபம்
ஆடுகளுக்கு தெரியாது
அரசியல்வாதியின் திட்டம்
அப்பாவிகளுக்கு புரியாது!
போராட்டத்தில்
முழக்கமிடும் கைகளை விட
உதவிக்கு நீளும் கை
உன்னதமானது!
ஒவ்வொன்றாய் பிரிந்திருப்பதில்
யாருக்கென்ன பயன்...
ஒன்றாய் ஒருங்கிணைந்து
ஒரு உலகமாய் ஒன்றாவோம்!
சி.கலாதம்பி, சென்னை.
