sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 21, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசை... ஆசை....

அரசியல்வாதிகளுக்கு

பதவி மேல் ஆசை...

அல்லக்கைகளுக்கு

உழைக்காமல் சாப்பிட ஆசை!

கடின உழைப்பாளிகளுக்கு

ஓய்வெடுக்க ஆசை...

கல்லுாரி காளைகளுக்கு

கன்னியர் மேல் ஆசை!

இல்லத்தரசிகளுக்கு

குடும்பத்தின் மேல் ஆசை...

இல்லத்தரசர்களுக்கோ

ஊரை சுற்றி வர ஆசை!

கொள்ளையடிப்பவருக்கோ

பணம் பதுக்க ஆசை...

திருட்டுத்தனம் செய்பவருக்கோ

தவறை மறைக்க ஆசை!

நேர்மையாய் நடப்பவருக்கோ

நீதியின் மேல் ஆசை...

ஊழலில் திளைப்பவருக்கோ

மாட்டாமல் இருக்க ஆசை!

சாமானிய மக்களுக்கோ

வசதியாக வாழ ஆசை...

வசதியாய் வாழ்பவருக்கோ

நிம்மதியின் மேல் ஆசை!

புண்ணியம் செய்பவருக்கோ

புகழின் மேல் ஆசை...

பாவங்கள் செய்பவருக்கோ

பரிகாரத்தின் மேல் ஆசை!

இப்படி ஆசைகளின்

பட்டியலை சிந்திக்க

எனக்கும் வந்தது ஆசை!

இளம்பிறை பாரூக்,

சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us