தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விடியல்தானே வாசல் தட்டும்!

* மனம் எட்ட முடியாத

மலை முகடு

திருப்தி!

* வயிறோடு வாழ்வது

கஷ்டமென்று கருதி

பழைய இலக்கியம்

பழி போட்டது!

* மனதோடு மல்லுக்கட்ட

அன்றைக்கு

அதிகம் அவசியமில்லை!

* வயிறு நிறைந்தால்

வாழ்க்கை முடிந்தது!

இன்றோ —

இருக்கக் கைமண் இடம்

சொந்தமாய் இல்லை!

* வாழ்ந்தோர் குறைவு...

தேவையும் குறைவு...

மனது பெரிதாய்

மலைப்பைத் தரவில்லை!

* பண்டிகை வந்தால் மட்டுமே

பட்சணம், புதுத்துணி...

பணத்தைப் பெருக்கப்

பந்தயம் அனுதினம்!

* இருப்பதோ எதுவுமில்லை...

பறப்பதைப் பிடிக்க

பாடுகள் படுகிறோம்!

* உஞ்சவிருத்தியால்

உயிர் வளர்த்தது

அந்தக் காலம்!

* ஏழேழு தலைமுறைக்கும்

சொத்துச் சேர்த்தும்

தலைமுறை தன்பின்

தன் தேவையைத்

தானே தேடிடும் நம்பிக்கையின்றி

இன்னமும் தேடிடும்

இழிநிலை இன்று!

* அகராதியில் கூட

அகப்படாமல்

அலைய வைக்கிறது

திருப்தி!

* போதும் என்பது

புரிபடாமல் போவதால்,

திருப்தி எதிலும்

தென்படுவதில்லை!

* வயிறைக் கூட

சரிகட்டி விடலாம்...

மனதை அடக்கும்

மார்க்கம் என்ன?

* நமக்கு அளந்தது

நன்மைக்கே என்று

நன்றியோடு நினைத்தால்...

விடை தேடி

விரைய வேண்டாம்...

விடியல் தானே

வாசல் தட்டும்!

— வளர்கவி, கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us