PUBLISHED ON : ஆக 18, 2019

அ நிறம் | அளவு
தேடலில் தொலையுது, வாழ்க்கை!
சிரிக்கும்போது
சிறகுகள் தேடி
சேர்ந்து பறக்க ஜோடிகள் தேடி!
அழும்போது
அறை கதவு மூடி
அணைக்க தலையணை தேடி!
உண்ணும்போது
உரைப்புக்கு கொஞ்சம்
ஊறுகாய் தேடி!
தனித்து இருக்கையில்
துணைக்கு வர
கனவுகள் தேடி!
கூட்டத்தின் நடுவே
குமைந்து போய்
தனிமை தேடி!
வாழ்வதற்கு வழி தேடி
வாழ்வு வந்த பின்
வசதி தேடி!
வாழ... வாழ...
வேதனை சேர...
வேண்டி வேண்டி நிம்மதி தேடி!
தேடி... தேடி...
தொலையுதடா வாழ்க்கை
தேடல் ஒன்று தான், நாம்
தேடி வாழும் வாழ்க்கை!
- கி. புஷ்பலதா, சென்னை.
