PUBLISHED ON : செப் 22, 2019

அ நிறம் | அளவு
நிழலுறவுகள்!
முகம் காணாமல்
முகநுாலில்
முதல் வணக்கம்
சொல்லுகிறோம்!
இடம் தெரியாத
இனத்தவரோடு
முழு நேரம்
'சாட்டிங்' செய்கிறோம்!
வகை வகையாய்
வசனங்கள் எழுதி
'வாட்ஸ் - ஆப்'பில்
வலம் வருகிறோம்!
கண்டவரும் காண
காட்சிப் படத்தை
சாட்சியாக்கி
சந்தோஷம் கொள்கிறோம்!
வேண்டாதவைகளை
பதிவேற்றம் செய்து
விலாசம் தெரியாதவரிடம்
விருப்பம் பெற்றுக் கொள்கிறோம்!
சொந்தங்கள்
சுற்றி இருந்தும்
'சோஷியல் மீடியா'க்களில்
சுற்றி வருகிறோம்!
நிஜமில்லாத
நிழல் உறவுகளோடு
எப்போதும்
இணைந்து இருக்கும் நாம்
எப்போதாவது வந்து போகும்
உறவுகளை வரவேற்று
வார்த்தை ஒன்று பேசி
வழியனுப்ப முடியாமல்
வலம் வருகிறோம்
திக்கற்றவர்களாக!
அ. ரேவந்த், கொச்சி.
