தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒற்றை நாள் தவம்!

இயந்திரங்கள் செய்யும்

ஒற்றை நாள் தவம்

ஆயுத பூஜை!

ஹடயோக நிஷ்டையில்

இயந்திரங்கள் லயித்திருக்கும்

இனிய நாள் இது!

மனிதன் கொண்டாடும்

சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி போல்

ஆயுள் நீட்டிப்பின் அடையாளம்

ஆயுத பூஜை!

ஆனால் -

மனிதன் கொண்டாடும்

ஆயுள் விருத்தி நாட்களை விட

அலாதியானது ஆயுத பூஜை!

தனக்கான ஜோடியோடு மட்டும்

மனிதன் சதாபிஷேகம் கொண்டாடுகையில்

ஒட்டுமொத்த இயந்திரங்களும்

மனித மேன்மைக்காக

கூட்டுப் பிரார்த்தனை செய்வதன் குறியீடே

ஆயுத பூஜை!

இயந்திரங்களின்

இந்த கூட்டு பிரார்த்தனையால்

மனிதனின் ஆயுள் மட்டுமல்ல

ஆஸ்தியுமல்லவா கூடுகிறது!

இருந்த கோலம், கிடந்த கோலத்தோடு

நடந்த கோலத்தையும் எடுத்து

நம்மை வியக்க வைக்கிறது இயந்திரங்கள்!

மனித கற்பனைகளுக்கு

வடிவம் கொடுத்து

நனவாக்கி மகிழ வைக்கிறது இயந்திரங்கள்!

இயந்திரங்கள்

மவுனித்திருக்கும் ஒற்றை நாள்

ஆயுத பூஜை!

மற்ற நாட்களில்

மனிதர்கள் மவுனமாய் இயக்க

இயந்திரங்கள் பேசும்!

இன்றோ

இயந்திரங்கள் மவுனமாய் இருக்க

மனிதர்கள் பேசுவர்!

மனிதன்

நிலாவை கண்களால் வருடி

சோறு உண்ணுகையில்

இயந்திரங்கள் அங்கே

கால்களை ஊன்றி

திரும்பின!

மனிதன்

செவ்வாய் என்று சிலாகிக்கையில்

இயந்திரங்கள் அதை

முத்தமிடும் மூர்க்கத்தில்

முன்னேறுகின்றன!

எனவே,

அஃறிணைகளுக்கு

ஆயுள் மட்டுமல்ல

ஆத்மாவும் உண்டு என்பதன்

அடையாளம் தான் ஆயுத பூஜை!

கற்பனைகளுக்கு

நிஜ வடிவம் கொடுக்கும்

இயந்திரங்களுக்கான இந்நாள்

வந்தனைக்குரிய நன்னாள்!

ஆர். கீதா குமாரி,

திருச்செங்கோடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us