
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமக்கு நாமே!
நம் பாதைகளை
செப்பனிட்டுக் கொள்வோம்
மற்றவர் பாதையில் ஏன்
மண் கொட்ட வேண்டும்!
நம் மனங்களை
மகிழச் செய்து கொள்வோம்
மற்றவர் மனங்களை ஏன்
புண்படுத்த வேண்டும்!
நம் வார்த்தைகளை
மெச்சிக் கொள்வோம்
மற்றவர் பேச்சுகளை ஏன்
கொச்சைப்படுத்த வேண்டும்!
நம் கைகளை
உயர்த்திக் கொள்வோம்
மற்றவர் கரங்களை ஏன்
முடக்க வேண்டும்!
நம் பூக்களை
வசம் செய்து கொள்வோம்
மற்றவர் மலர்களை ஏன்
துவம்சம் செய்ய வேண்டும்!
நம் எண்ணங்களை
வண்ணமுறச் செய்து கொள்வோம்
மற்றவர் கனவுகளை ஏன்
கலைக்க வேண்டும்!
நம் கொள்கைகளை
முத்திரையாக்கி கொள்வோம்
மற்றவர் லட்சியங்களை ஏன்
அலட்சியம் செய்ய வேண்டும்!
நம் பார்வைகளை
நேராக்கி கொள்வோம்
மற்றவர் காணல்களில் ஏன்
கோணல் காணவேண்டும்!
நமக்கு நாமே நல்வழிகளை
வகுத்துக் கொள்வோம்
நாளைய நம் சந்ததியினர்
நலமுடன் வாழ
நம்பிக்கை பிறக்கட்டும்!
நிலவழகன்,
முகவூர், கொச்சி.

