தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை

கவிதைச்சோலை

கவிதைச்சோலை


PUBLISHED ON : மே 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிர்காலம்

* பறவை உதிர்த்த

ஒற்றை இறகாய்

காற்றில் அலைகிறது...

நம் தேடல்கள்!

* பாழுங் கிணற்றில் போட்ட

கூழாங் கற்களாய்

குவிந்து கிடக்கிறது...

நம் லட்சியங்கள்!

* நூலறுந்த பட்டமாய் போய் விடுமா

தாயின் கனவுகள்...

காதறுந்த ஊசியென ஆகிவிடுமா

தந்தையின் கணிப்புகள்!

* பகல் உணவென்பது

பகல் கனவானாலும்

நிகழ்காலப் பசி இருட்டுக்கு

அகல் விளக்கேற்றுவோம்!

* வேற்றுக் கிரகம் வரை

வெற்றிக் கொடி நாட்ட வந்த நாம்

சோற்றுப் பருக்கையின்

சுகமான நினைவிலா

தோற்றுப் போவது?

* நம்

முகவரியை முன்மொழிய

உதடுகளே இல்லாதவர்களிடமா

ஒப்பாரி வைப்பது?

* நம்

கவிதைகள் அரங்கேற்ற

பாடைகளிடமா

மேடை கேட்பது?

* தொடர்ந்து ஜெயிக்காது

தோல்விகள்...

தொடர்ந்து தோற்காது

வெற்றிகள்...

வா... தோழா...

இறந்த காலம் செலவாகட்டும்...

எதிர்காலம் வரவாகட்டும்!

— எஸ்.பி.நீலமேகன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us