
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கேட்டுப் பார்!
பூக்களிடம் கேட்டுப் பார்
மரணமே எதிர் வந்தாலும்
சிரிக்க சொல்லித் தரும்!
அலைகளிடம் கேட்டுப் பார்
எத்தனை தடை வந்தாலும்
போராட சொல்லித் தரும்!
தென்றலிடம் கேட்டுப் பார்
எதிரியையும் குளிர்ச்சியாக
தழுவச் சொல்லித் தரும்!
மரங்களிடம் கேட்டுப் பார்
வெட்டினாலும் மீண்டும் துளிர்த்து
பயன் தர சொல்லித் தரும்!
நீர் வீழ்ச்சியிடம் கேட்டுப் பார்
வீழ்ச்சி என்றாலும்
அபார வளர்ச்சி பெற சொல்லித் தரும்!
சூரியனிடம் கேட்டுப் பார்
வாழ்க்கை இருள் நிறைந்தாலும்
அதை ஓட விரட்டச் சொல்லித் தரும்!
எறும்புகளிடம் கேட்டுப் பார்
எத்தனை இடர் வரினும்
ஒழுங்காக வாழச் சொல்லித் தரும்!
நாயிடம் கேட்டுப் பார்
நிராகரிப்பு நிகழ்ந்தாலும்
நன்றி காட்ட சொல்லித் தரும்!
மனிதா
பிரபஞ்சத்திடம் கேட்டுப் பார்
நீ சாதனையாளனாகும்
வழியை சொல்லித் தரும்!
ஏ. மூர்த்தி, திருவள்ளூர்

