PUBLISHED ON : மார் 15, 2020

அ நிறம் | அளவு
புதிய திசைகளில் பயணம் செய்!
அதிர்ஷ்டம் வந்து
தட்டும் என்று
கதவை மூடி
வைக்காதே!
வாய்மொழியின்றி
வாய்ப்புகள் வரலாம்
வாசல் தாண்டி
வெளியே செல்!
நனவாகும் என்று
கனவுகள் கண்டு
துாங்கிக் கொண்டே
கிடக்காதே!
பழைய பாதைகளை
புதைத்து விட்டு
புதிய திசைகளில்
பயணம் செய்!
முயற்சி கிளைகள்
முறிந்து போனாலும்
நம்பிக்கை வேர்களுக்கு
வியர்வை பாய்ச்சு!
நேற்றை எரித்து
சாம்பல் ஆக்கு
பீனிக்ஸ் பறவையாய்
இன்று பறந்து காட்டு!
நிஷாத் பானு, சென்னை.
