தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஆக 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தைரியம் இல்லையென்றால்!

மனமே ஆலயம்

தைரியமே கடவுள்

கடவுள் இல்லா

ஆலயம் சிறக்காது...

அது போல்,

தைரியம் இல்லா

வாழ்வும் சிறக்காது!

மனமே மரம்

தைரியமே நீர்

நீர் இன்றி

மரம் வளராது...

அது போல்,

தைரியம் இன்றி

வாழ்க்கையும் வளராது!

மனமே இருள்

நிலவே தைரியம்

இருள் இன்றி

நிலவு ஜொலித்திடாது...

அது போல்,

நல்ல மனம் இன்றி

தைரியம் பிறந்திடாது!

தைரியம் இல்லையென்றால்

தைரியத்தின் எதிரி

நம்முள் எட்டிப் பார்க்கும்

நம்மை தட்டிப் பார்க்கும்!

கூட்டத்தில் கூச்சம் தரும்

தனிமையில் சோகம் தரும்

தோல்வியில் துயரம் தரும்

வெற்றியை துார தள்ளும்!

தைரியம் இல்லையென்றால்

பயமே நம்மை ஆளும்

நமது சுயமே

பயமாய் மாறும்!

நம்மை அழிக்கும் பயத்தை

நாம் அழிப்போம்...

நம்மை வளர்க்கும் தைரியத்தை

நம்முள் வளர்ப்போம்!

தைரியம் இல்லையென்றால்

தடம் பதிக்க முடியாது...

பயம் இல்லையென்றால்

தடம் பதிப்பதை நிறுத்த முடியாது!

ம.போ.சாந்தகுமார், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us