தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : அக் 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நவராத்திரி தரும் ஞானம்!'

அறுவகைச் சமயங்களில்

ஒருவகைச் சமயம்

'சாக்தம்!'

அது -

சக்தி வழிபாட்டால்

முக்தி பெறுவதை

முன்னிலைப்படுத்துகிறது!

விண் கண்ட தெய்வங்களில்

கண் கண்ட தெய்வங்கள்

மூன்று!

அந்த மூவருக்காக

யாவரும் நலம்பெற

எடுக்கும் விழா நவராத்திரி!

மனிதன்

தாமசம் விட்டு

ராட்ஷம் கடந்து

சத்வம் பெறுவதையே

சக்தி வழிபாடு

முக்தி என்கிறது!

இதையே

துர்கா பூஜை துவங்கி

லட்சுமி பூஜை கடந்து

சரஸ்வதி பூஜையின் நிறைவாய்

சக்தி வழிபாடு சாற்றுகிறது!

'துஷ்ட நிக்ரஹம்

சிஷ்ட பரிபாலனம்'

இது -

அஷ்ட லட்சுமிகளால் மட்டுமே

ஆகும் காரியம் என்பதை

அறிவுறுத்துகிறது நவராத்திரி விழா!

நவராத்திரி பெருவிழா

விழாக்களின் பீடத்தில்

கொலுவிருக்கும்

கொலு விழா!

ஆதி லட்சுமி துவங்கி

வித்யா லட்சுமி வரை

அஷ்ட லட்சுமிகட்கும்

நடக்கிற விழா...

என்றாலும் -

எட்டு லட்சுமிகளுக்கான

ஒன்பது நாள் விழா...

பத்தாம் நாளே

முடிவு பெறுகிறது!

பட்டாடை மின்னி வர

குட்டிச் சிறுமிகளின்

பண்ணும், பரதமும்

மண்ணதிர நடக்கும்

மணி விழா

நவராத்திரி திருவிழா!

விஜயதசமியின்

விழா நிறைவு

மனிதம் ஞானம் சூடும்

மகுட நாள்!

இந்த, 10 நாட்களும்

கொடுப்பதும்

கொடுப்பதால் களிப்பதும்

கொலு நிறைவு பெறுகிறது!

தருவதில், பெறுகிற இன்பம்

பெறுவது, தருவதில்லை!

இதை -

படிப்படியாய் உணர்த்துகிறது

கொலுப்படிகளால் கோலோச்சும்

நவராத்திரி நாட்களின் ஞானம்!

வளர்கவி, கோவை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us