
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால விரையம்!
கணப்புச் சட்டிகளை
தயார் செய்வதிலேயே
காலம் கழிந்தால்
குளிர் காய்வது எப்போது?
வீணை நரம்புகளை
சுதி சேர்ப்பதிலேயே
காலம் கழிந்தால்
கானம் இசைப்பது எப்போது?
வண்ணக் கலவைகளை
வகைப்படுத்துவதிலேயே
காலம் கழித்தால்
ஓவியம் தீட்டுவது எப்போது?
கற்களைத் தேர்ந்தெடுப்பதில்
காலம் கடத்தினால்
சிற்பம் செதுக்குவது எப்போது?
துடுப்பைச் செதுக்குவதிலேயே
காலம் கழித்தால்
படகைச் செலுத்துவது எப்போது?
பரிட்சை பற்றியே
பதைத்துக் கொண்டிருந்தால்
படிக்க துவங்குவது எப்போது?
கால விரயத்திலேயே
கரைந்து போய் விட்டால்
காணும் வெற்றிகள் எப்போது?
இளசை சுந்தரம், மதுரை.

