தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : நவ 15, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 15, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முயற்சியே வெற்றி!

கால்கள் நடக்க தயாரானால்

பாதைகள் மறுப்பதில்லை!

ஈட்டிகள் பாயத் துவங்கினால்

இலக்குகள் மூடுவதில்லை!

உண்மைகள் பேச ஆரம்பித்தால்

பொய்கள் வேஷமிடுவதில்லை!

புண்ணியங்கள் தொடர ஆரம்பித்தால்

பாவங்கள் நிலையாவதில்லை!

பகல்கள் விடிய ஆரம்பித்தால்

இருள்கள் சூழ்வதில்லை!

அன்பு பொழிய துவங்கினால்

ஆணவங்கள் கொள்வதில்லை!

சமாதானங்கள் கூட ஆரம்பித்தால்

சச்சரவுகள் காண்பதில்லை!

புகழ் மாலை தோளில் விழ ஆரம்பித்தால்

அவமானங்கள் தலை நிமிர்வதில்லை!

முயற்சிகள் செய்ய ஆரம்பித்தால்

வெற்றிகள் ஓடி ஒளிவதுமில்லை!

முத்துாஸ், ராமநாதபுரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us