தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஜூன் 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 05, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னிப்பு!

* உன்னைக் கரம் பற்றிய

நாள் முதலாய்

என் வாழ்க்கைத் தரம்

உயர்ந்தது!

* கண் போல் என்னையும்,

பிள்ளைகளையும்

காக்கிறாய்...

அன்பால் அனைவரையும்

ஈர்க்கிறாய்!

* முகமறிந்து நடக்கிறாய்...

தும்மல் வந்தாலும்

துடிக்கிறாய்...

துவளும் போது

தோள் கொடுக்கிறாய்!

* பசி வந்து பார்த்ததில்லை

அழுக்காடை அணிந்ததில்லை

நோய் வந்து துடித்ததில்லை

தாய் மனம் கோணியதில்லை!

* பேரன் - பேத்தி

எடுத்த பின்னும்

கத்துவதையும்,

உன்னைத் திட்டுவதையும்

விடாத என்னிடம்...

* மந்திரியாய், நண்பனாய்

ஆசானாய், தாதியாய்

இன்றளவும் நம் இல்லறத்தில்

இனிமை சேர்க்கிறாய்!

* இதுவரை, ஒரு நாள் கூட

உன்னைப் பாராட்டியதில்லை

போற்றியதில்லை, புகழ்ந்ததில்லை...

மதித்ததில்லை, வாழ்த்தியதில்லை!

* எல்லாவற்றிற்கும் சேர்த்து

உன்னிடம் மன்னிப்புக்

கேட்டுக் கொள்கிறேன்...

உன் காலைத் தொட்டு

நீ தூங்கும் போது...

உனக்குத் தெரியாமல்!

— சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us