PUBLISHED ON : பிப் 21, 2021

அ நிறம் | அளவு
ஒற்றுமையின் வலிமை!
உழைப்பு மிகுந்த
இடமெங்கும்
தன்னம்பிக்கை பெருகி
செல்வம் கொழிக்கும்!
கனிமவளம் நிறைந்திருக்கும்
இடமெல்லாம்
தொழில்வளம் பெருகி
பொருளாதாரம் சிறக்கும்!
தவறுகள் திருத்தப்படும்
இடமெல்லாம்
பாவங்கள் விலக்கப்பட்டு
மன்னிப்புகள் குவியும்!
உரிமைக்குரல் ஒலிக்கும்
இடமெல்லாம்
அநியாயங்கள் வெட்கி
தலைகுனிந்து மரணிக்கும்!
தன்னம்பிக்கை துளிர் விடும்
இடமெங்கும்
தயக்கங்கள் மறைந்து
சாதிக்கும் வல்லமை
தலை துாக்கும்!
பாச உணர்வுகள் பொங்கும்
இடமெல்லாம்
பகைமை விலகி
ஒற்றுமையின் வலிமை
ஓங்கி நிற்கும்!
மனிதநேயம் மிகுந்த
இடமெங்கும்
மன கசப்புகள் ஒழிந்து
இனிய வாழ்க்கையில்
சுவையை கூட்டி கொடுக்கும்!
மணியட்டிமூர்த்தி, கோவை.
