
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரணங்களும், வலிகளும்!
நமக்குள் உறைந்திருக்கும்
ரணங்களும், வலிகளும் தான்
உறங்கும் உணர்வுகளை
திறந்திடும் திறவுகோல்கள்!
ரணங்களும், வலிகளும்
நம் உயிர்ப்பித்தலின்
முகவுரையைத் தீட்டும்
துாரிகைகளாகும்!
ரணங்களையும், வலிகளையும்
உள்ளந்தோறும்
உத்வேகச் சக்கரங்கள்
நம்மை நகர்த்திடும்!
எந்த ஆசிரியரும்
சொல்லித் தராத
வாழ்வை உயர்த்திடும்
பல்சுவை பாட நுால் அவை!
படித்து பட்டம்
பெறுவோர் பலர்
'பட்டப் படிப்பினை'யால்
சோதனைப் படிகளை
கடந்தவர் ஏராளம்!
ரணங்களையும், வலிகளையும்
கவசங்களாக்கி
காலத்தை வென்றவர்களே
ஞாலத்தில் மேதைகளாயினர்!
நாமும் இன்று முதல்
பிறர் நம்மை காயப்படுத்தலை
எண்ணி துக்கப்படுவதை விட்டு
துணிந்து நடந்தால்
துயரங்கள் துார விலகி ஓடும்!
ஜனபிரவாகன், சென்னை.