தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவீன அரசியல்!

தொண்டர்களை கொண்டு

தொண்டாக நடந்த அரசியலே

குண்டர்களைக் கொண்டு

நடக்கும் தொழிலாகிப் போனது!

வாக்குத் தவறாமல் தலைவர்கள்

நடந்தது அந்தக் காலம்...

நாக்கு தவறுகிறது இந்தக் காலம்...

ஓட்டின் வலிமையைக் காட்டிலும்

அரசியல்வாதிகளின்

நாக்கின் வலிமை அதிகம்!

தேர்தலுக்கு முன் அரசியல்வாதிகள்

கும்பிடு போடுவதும்

தேர்தலுக்கு பின் வாக்காளர்கள்

கூப்பாடு போடுவதும் வாடிக்கையாயிற்று

தேர்தலுக்கு முன் மதிப்பதும்

முடிந்த பின் மிதிப்பதும் சகஜமாயிற்று!

கல்விக் கூடங்களை அமைத்து

படிக்கச் சொன்னது அப்போ

குடிக்கச் சொல்வது இப்போ...

அரசு பணிக்குத் தேவை

கல்வித் தகுதியும், சிபாரிசும்

தகுதியே தேவையில்லை

எங்கள் அரசியல்வாதிகளுக்கு!

குணம் பார்த்து, செயல் பார்த்து

ஓட்டளித்தது ஒரு காலம்

கொடுக்கும் ஆயிரத்துக்கேற்ப

ஓட்டளிப்பது இந்தக் காலம்...

தேர்தல் வயலில் பணத்தை விதைத்து

ஓட்டுப் பயிர் ஈட்டிடும்

அரசியல் விவசாயிகள்!

இலவச வலை விரித்து

பணத் துாண்டிலிட்டு

ஓட்டுகளை வேட்டையாடி

வாகை சூடிடும் வேடதாரிகள் கூட்டம்...

ஓட்டின் மதிப்பறியாமல்

ஒருநாள் மகிழ்ச்சிக்காக

ஓட்டளித்து விட்டு

ஐந்தாண்டுகள் அழுது புலம்பும்

அப்பாவி மக்கள் கூட்டம்!

மக்களுக்கான சேவை

வியாபாரம் ஆகிப்போனது

தொண்டாய் நடந்த அரசியல்

பெரும் தொழிலாகிப் போனது!

போனது போகட்டும்

மாறுதல் காணும் நேரமிது...

மனது வைப்போம்

மாற்றத்தைக் கொண்டு வருவோம்!

சோம.சிவ.சங்கர்,

திருப்பரங்குன்றம்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us