PUBLISHED ON : மே 30, 2021

அ நிறம் | அளவு
எப்படி... எப்படி...
உயரங்களைக் கண்டு
மலைத்து நின்றால்
சிகரங்களில் ஏறி
சாதிப்பது எப்படி?
தொலைவுகளைக் கண்டு
மிரண்டு போனால்
பயணங்களை அனுபவித்து
மகிழ்வது எப்படி?
ஆழங்களைக் கண்டு
அச்சம் கொண்டால்
நீச்சல் கற்று
பூரிப்பது எப்படி?
வேகங்களைக் கண்டு
நடுக்கம் வந்தால்
பொன் போன்ற நேரத்தை
சேமிப்பது எப்படி?
தடைகளைக் கண்டு
தயக்கம் காட்டினால்
முன்னேறிச் சென்று
வெல்வது எப்படி?
அவமானங்களைக் கண்டு
அடங்கிக் கிடந்தால்
திறமைக்கு வெகுமதிகள்
பெறுவது எப்படி?
துயரங்களைக் கண்டு
முடங்கி அழுதால்
சிறப்பான வாழ்வை
அடைவது எப்படி?
தோல்விகளைக் கண்டு
துவண்டு சரிந்தால்
அழியாத புகழை
ஈட்டுவது எப்படி?
எஸ். கண்ணன், தஞ்சாவூர்.
