PUBLISHED ON : ஆக 22, 2021

அ நிறம் | அளவு
அமைதி...
நாலு அங்குல
கைபேசிக்குள்
உலகமே
அடங்கிக் கிடக்கிறது!
இருந்த இடத்தில்
இருந்தபடியே
அமர்ந்தவாறே
பேசி பேசியே...
எல்லா வேலைகளையும்
முடித்து விடுகின்றனர்
இன்றைய படித்த
இளைஞர்கள்!
வங்கிக்கு போகாமல்
விரல் நுனியிலே
வரவு - செலவு
செய்து விட முடிகிறது!
உணவு, உடை, உறைவிடம்
எல்லாவற்றையும்
இணையத்தில்
தேர்வு செய்து விடலாம்!
கார் முதல் கைபிடிக்கும்
மனைவி முதல்
படம் பார்த்து
பதிவு செய்யலாம்!
பேருந்து, ரயில், விமானம்
எல்லா பயணங்களையும்
நினைத்தபோது பதிவு
செய்து விட முடிகிறது!
சொகுசாக செலவழித்து
கை நிறைய
லட்சங்கள்
சம்பாதித்த போதும்
இன்றுள்ளவர்களால்
விலைக்கு வாங்க முடியாதது
மன அமைதியைத்தான்!
சொல்கேளான் ஏ.வி.கிரி,
சென்னை.
