தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆரம்பமாகட்டும்!

ஜாதி அனல் அடிக்கும்

சமூக தோட்டத்தில்

சமரச தென்றல் வீசும்

காட்சி ஆரம்பமாகட்டும்!

மதச்சாயம் மாறாத

மனிதர் இதயங்களில்

வண்ணங்கள் வலம் வரும்

வசந்தங்கள் ஆரம்பமாகட்டும்!

பேராசை புற்று வளரும்

பெருத்த எண்ணங்களில்

போதுமென்ற பொன்மனம்

புழங்க ஆரம்பமாகட்டும்!

பொறாமை புற்கள் முளைக்கும்

பிற்பட்ட நெஞ்சங்களில்

முற்போக்கு சொற்கள்

முழங்க ஆரம்பமாகட்டும்!

வஞ்சக வார்த்தைகள் வரும்

நெஞ்சகத்து நிலங்களில்

வாழ்த்து செடிகள் மலரும்

வழிகள் ஆரம்பமாகட்டும்!

சந்தேக சாக்கடை ஓடும்

சலன சரீரத்தில்

சந்தோஷ சாரல் விழும்

சம்பவம் ஆரம்பமாகட்டும்!

குப்பை கூளங்கள் குவிந்த

கொட்டார மனங்களில்

கோபுர கலசங்கள் ஜொலிக்கும்

கோலங்கள் ஆரம்பமாகட்டும்!

நஞ்சு ஊறி எஞ்சி கசிந்த

ரத்த ஆற்று நாளங்களில்

சுத்த சிந்தனை சுரக்கும்

சுப நாள் ஆரம்பமாகட்டும்!

க. அழகர்சாமி, கொச்சி, கேரளா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us