sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!

கவிதைச்சோலை!


PUBLISHED ON : ஏப் 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெருமைப்படு தமிழா!

மண்ணை அளந்தாய்

விண்ணை அளந்தாய்

அணுவுக்குள் இருக்கும்

பெருவொளி நாதமெனும்

பிரணவத்தில் லயித்தாய்

அண்டம் ஆனந்தம் - விடை

கண்டவன் நீ...

பெருமைப்படு தமிழா!

ஆடு, மாடு மேய்த்தாய்

அரியணை ஏறினாய்

காடு வெட்டினாய்

கழனி அமைத்தாய்

மலையை குடைந்தாய்

சிலையை வடித்தாய்

பெருமைப்படு தமிழா!

உலகை சுற்றினாய்

உழவை கற்பித்தாய்

இழையோடும் காதலில்

இசைத்து நடனமிட்டாய்

பூ பந்து முழுதும்

வீரக்கல் நட்டாய்

பெருமைப்படு தமிழா!

ஆயுதம் செய்தாய்

ஆடையும் நெய்தாய்

நாட்டை ஆண்டாய்

நாடு கடத்தினாய்

கடலாடினாய்

கண்டம் முழுதும்

உறவை விரித்தாய்

பெருமைப்படு தமிழா!

ஒலியினும் வேகம்

ஒளிதான் நீயறிவாய்

மனோ வேகம் கற்று

ஆயிரத்து எட்டு கோடி

அண்டம் எண்ணி

ஆத்ம நாதனாய்

அருள்பவனும் நீயே...

பெருமைப்படு தமிழா!

லிங்கத்தை கல்லென மூடி

சுற்றி வரும் மதம்

லிங்க தோற்றத்தில்

ஆலயம் கட்டிய மதம்

உன் தாய் - தந்தை

வழி உறவென அறிவாயா?

யுகங்கள் மாறினாலும்

உன் சுவடுகள் மாறாது

எம்மதமும் ஓதும் வேதம்!

உடைந்த கண்ணாடி

சிதறலில் உன் முகம்

எதுவென கூறுவாயா...

ஆற்று மணலில்

தோற்றுவாய் தேடுவாயா...

உலகம் முழுதுமே

உன் உறவுகள்

பெருமைப்படு தமிழா!

பாரதிசேகர், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us